திமிருக்கு மறுபெயர் நீதானே 3

Tamil Sex Stories “சரி அது என்னடா விஷயம் ? “போன வருஷம் கெமிஸ்ட்ரி லேப்ல எல்லாரும் டெஸ்ட்டுயுப் வச்சு எக்ஸ்பெரிமெண்ட் பண்ணிட்டு இருந்தோம்.

அப்போ சால்ட் எடுக்க போறதுக்காக ஒருத்தன் அவளை கிராஸ் பண்ணி போனான். திரும்ப வரும்போது தெரியாம அவளோட முதுகுல அவனோட முழங்கை நல்லா உரசிரிச்சு.

உடனே கோபத்துல இவ கையில இருந்த பெரிய டெஸ்ட்டுயுப் எடுத்து அவன் தலையிலேயே போட்டு மண்டைய உடைச்சுவிட்டுட்டா.

அதுல இருந்து எந்த பசங்களும் இவ கிட்ட பேசுறதே இல்லை. இவ வர்றான்னு தெரிஞ்சாலே அங்க இருந்து விலகி போயிடுவாங்க.

“தினேஷ் என்னடா சொல்லுற இப்படி பட்டவளை எப்படி ஸ்கூல்ல வச்சுருக்காங்க யாரும் கம்ப்ளைன்ட் எதுவும் பண்ணலையா.

“இதுவரைக்கும் அறை வாங்குனவன் எவனும் கம்ப்ளைன்ட் பண்ணலை.

ஆனா கெமிஸ்ட்ரி லேப்ல மண்டை உடஞ்சு போன பையன் மேல ஏற்கனவே நிறையா பொண்ணுங்க எங்ககிட்டே வந்து அசிங்கமா பேசுறான்னு கம்ப்ளைன்ட் பண்ணிருக்காங்க. அதுனால அவன் நிறையா தடவ ஸ்கூல்ல இருந்து சஸ்பென்ட் வாங்கிருக்கான்.

பாவம் கடைசியா அவன் செய்யாத தப்புக்கு மண்டைய உடச்சு ஸ்கூல விட்டே அவன பயந்து ஓட வச்சுட்டா.

அதோட இந்த விஷயத்துல டீச்சர்ஸ் எல்லாரும் இவளுக்கு தான் ரொம்ப சப்போர்ட் அதுக்கு காரணம் ரொம்ப நல்லா படிக்கிற பொண்ணு.

கடைசியா நடந்த பத்தாவது தேர்வுல நம்ம ஸ்கூல்லயே இவ தான் முதல் மார்க் வாங்குனா. அதுல இருந்து இவ மேல இருந்த மதிப்பு இன்னும் நல்லா கூடிபோச்சு.

இதையெல்லாம் கேட்ட நான் வாயடைத்து போய் ஏதும் பேசாமல் தினேஷின் முகத்தியே என்ன வித சலனமும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இதை கவனித்த தினேஷ் என்னிடம் மேலும் பேச ஆரம்பித்தான்.

“டேய் விக்ரம் நீ எதையும் இன்னும் நம்பாம இருக்கேன்னு தான் நினைக்குறேன். கடைசியா ஒரே ஒரு மேட்டர் இருக்கு அத கண்டிப்பா நீ நம்புவே.

“என்ன மேட்டர் சீக்கிரம் சொல்லுடா, பதற்றத்துடன் கேட்டேன்.

“இதோ பக்கத்துல இருக்கானே வெங்கட் அவளோட அண்ணன் தான்.

“என்னடா தினேஷ் இவன அண்ணன்னு சொல்லுற, எப்படி ஒரே கிளாஸ்ல படிக்குறான். ஏன்டா நீ இப்படி உளறிகிட்டு இருக்கே.

“டேய் விக்ரம் நான் ஒன்னும் உளறலை, என்னைய முதல்ல பேச விடுடா என்று கோபமடைந்தான்.

“நான் எதுவும் பேசல, யு கண்டினுயு என்று சிரித்தேன்.

“வெங்கட்டும் அவளும் ட்வின்ஸ், அறிவியல் படி முதல்ல பிறந்த அவ தங்கச்சி ஆகிட்ட கொஞ்ச நேரம் கழிச்சு பிறந்த நம்ம வெங்கட் அண்ணன் ஆகிட்டான்.

“ஓ… என வாயை பிளந்து அவன் சொல்வதை கேட்டுகொண்டிருந்தேன்.

“நாயே வாய மூடு வாய் குள்ள கொசு போயிட போகுது, இதுக்கு மேல கதைய வெங்கட் சொல்லுவான் என்று தினேஷ் கூறிவிட்டு,

“வெங்கி யு கண்டினுயு என்றான்.

இவ்வளவு நேரம் நாங்கள் பேசுவதை பொறுமையாக கேட்டுகொண்டிருந்த வெங்கட் என்னிடம் பேசத்தொடங்கினான்.

“விக்ரம் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நான் என்னோட ரூம்ல உக்காந்து ஹோம் வொர்க் எழுதிகிட்டு இருந்தேன். அப்போ பேனால இங்க் தீந்து போச்சு.

பக்கத்துல இருந்த அவ ரூமுக்கு போயி அவளோட பேனாவ கேட்டு வாங்கி எழுதலாம்னு போனேன். அங்க அவ இல்லை.

அதோட எனக்கு டைமும் இல்லாத காரணத்துனால அவ கிட்ட கேக்காம பேனாவை எடுத்துட்டு போயி எழுத ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரத்துல எழுதி முடிச்சுட்டு பேனாவை அவ டேபிள்ல வைக்கலாம்னு போனேன்.

அப்போ சரியா அவளும் ரூமுகுள்ள நுழைஞ்சா என்னோட கைல இருக்குற பேனாவ பாத்துட்டு ரொம்ப ஆத்திரமா என்ன திட்ட ஆரம்பிச்சா.

அவளை நான் சமாதானம் செய்ய முயற்சி பண்ணேன். ஆனா அவ பக்கத்துல இருந்த ஜியோமெட்ரி பாக்ஸ எடுத்து ஓங்கி என்னோட நெத்தியில அடிச்சுட்டா.

“அப்புறம் என்ன ஆச்சு என்று வியப்புடன் கேட்டேன்.

“அப்புறம் என்ன எனக்கு தான் ஆப்ரேஷன் நெத்தியில ரெண்டு தையல் போட்டாங்க. இன்னும் அந்த தழும்பு கூட அப்படியே இருக்கு என்று அதை கட்டினான்.

எனக்கு அதை பார்த்ததும் உடலெங்கும் நடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மேலும் தொடர்ந்து பேசினேன்.

“வெங்கி உங்க வீட்டுல இவளை கண்டிக்க மாட்டாங்களா என்றேன்.

“ஹ்ம்ம் அம்மாவும் அப்பாவும் திட்டுவாங்க ஆனாலும் இவ மேல எங்களுக்கு ரொம்ப பாசம் இருந்ததால எதுவும் சொல்ல மாட்டோம். அதோட இவ கோபத்தை கட்டுப்படுத்துறதுக்காக யோகா கிளாஸ்ல சேர்த்து விட்டுருக்கோம்.

“ஓ… அதுக்கப்புறம் கோபம் போச்சா ?

“அதெல்லாம் போன மாதிரி தெரியலை,

ஆரம்பத்துல நான் ஏதாச்சும் அவளை வம்பு இழுத்தா கன்னத்துல அடிப்பா.

அதெல்லாம் பாசத்துல தான் அப்படி அடிக்குறான்னு நினைச்சு விட்ருவேன்.

ஆனா அவ என்னோட நெத்தில அடிச்சு தையல் போடவச்சதுல இருந்து இப்ப வரைக்கும் நான் பேசுறதே இல்லை, அவளும் என்னை கண்டுக்கிறது இல்லை என்று சோகமாக கூறினான்.

அவன் முகத்தை பார்ப்பதற்கே மிகுத்த வருத்தமாக இருந்தது.

“வெங்கி ஏதும் கவலைப்படாத எல்லாம் சரி ஆகிடும் என்று ஆறுதல் சொன்னேன்.

“விக்ரம் நான் கவலைப்படாம இருக்குறது இருக்கட்டும். நீ அவகிட்ட எதுவும் பேச்சு வச்சுக்காதே, அப்புறம் அடி தாங்கமாட்ட என்று எச்சரித்தான்.

எனக்கு இப்போதே அடிவயிறு கலக்கியது, ஆனாலும் அதை மறைத்துகொண்டு பேசினேன்.

“அதெல்லாம் எதுவும் நடக்காது, எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்.

“ஆமா இவரு கிழிச்சாரு, எல்லாத்தையும் பாத்துகுவாராம் என்று தினேஷ் நக்கலடித்தான்.

நான் உடனே முறைத்தேன், அதை அவன் ஒரு பெரிய பொருட்டாக நினைக்காமல் வெங்கியிடம் பேசினான்.

நான் அப்பவே இவன் கிட்ட கடைசி பெஞ்ச்ல போயி உட்காரலாம்னு சொன்னேன். பெரிய வெண்ணை மாதிரி முதல் பெஞ்சுல தான் உட்காருவேன்னு அடம்பிடிச்சான்.

இப்ப அவ இவனுக்கு பக்கத்துல இருக்குற பெஞ்சுல வந்து உட்காந்ததும்,
“என்னோட மனசுல இருந்த பாரமே குறைஞ்சிருச்சு”

இனிமே பக்கத்துல இருக்குற அவகிட்ட இவன் பேசவே முடியாது என்று கேலி செய்து சிரித்துக்கொண்டே இருந்தான்.

அப்போது இதுவரை பேசாமல் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த கார்த்தி என்னிடம் பேச ஆரம்பித்தான்.

“விக்ரம் அவ என்னையும் ஒரு தடவ கன்னத்துல அறைஞ்சுட்டா என்று கூறியதும் அனைவரும் பேச்சை நிறுத்தினர்.

“எப்படா எங்க கிட்ட சொல்லவே இல்லையே என்று வெங்கியும் தினேஷும் ஒன்றாக சேர்ந்து அதிர்ச்சியுடன் கேட்டனர்.

“உங்க கிட்ட சொல்லிருந்தா என்னைய கிண்டல் பண்ணிருபீங்க, நாளை பின்னே அவகிட்ட பேசி விக்ரம் அடி வாங்கிற கூடாதுன்னு தான் இதை சொல்லுறேன்.

இவன் இப்படி கூறியதும் தினேஷ் கொஞ்சம் வேதனை அடைந்தான். அதற்கு மேல் என்னையும் கிண்டல் செய்ய விருப்பம் இல்லாமல் கார்த்தியிடம் என்ன நடந்தது என்று கேட்டான்.

கார்த்தி அந்த சம்பவத்தை பற்றி கூற ஆரம்பித்தான்.

போன வருஷத்துல ஒரு நாள் சாயிந்தரம் ஸ்கூல் விட்டதும் அவளோட சைக்கிள எடுத்து ஓட்டிகிட்டு போனா.

அப்போ மெயின் கேட் கிட்ட நான் நடந்து போய்கிட்டு இருந்தேன். சரியா என்ன கிராஸ் பண்ணி போகும்போது சைக்கிள்ல இருந்து அவளோட பேக் கீழ விழுந்துச்சு.

கொஞ்ச தூரம் போனதும் தான் பேக் கீழ விழுந்தது அவளுக்கு தெரிஞ்சுது,
உடனே பேக் எடுக்க திரும்பி வந்தா.

அந்த பேக் என்னோட கால் கிட்ட விழுந்ததுனால எடுத்துகிட்டு போயி அவ கிட்ட வேக நடந்து போயி கொடுத்தேன்.

அதை வாங்கிட்டு தேங்க்ஸ் தான் சொல்ல போறான்னு எதிர் பாத்துட்டு இருந்தேன்.

ஆனா நடந்தது வேற,

என்னோட பொருள எடுத்துக்க எனக்கு தெரியும், எனக்கு எவனும் ஹெல்ப் பண்ண வேணாம்னு சொல்லிட்டு அவளோட கையை ஓங்கி பளார்னு கன்னத்துல ஒரு அடி விட்டா, எனக்கு சப்த நாடியும் அடங்கி போச்சு.

அதுக்கப்புறம் அவ அங்கிருந்து வேகமா கிளம்பி போயிட்ட,

நான் அடிவாங்குனதை யாரும் பாக்கலைன்னு உறுதி படுத்திக்கிட்டு அங்க இருந்து வேகமா கிளம்பி வீட்டுக்கு போயிட்டேன் என்று சோகமாக கூறி முடித்தான்.

நாங்கள் மூவருமே இதை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம்.

“அவ ஒரு ராட்சசி என்று வெங்கட் அவளை திட்டினான்.

“ராட்சசி இல்ல திமிரு பிடிச்சவ, அவ திமிர கண்டிப்பா அடக்கியே ஆகணும் என்று கோபமாக தினேஷ் கூறினான்.

“விடுங்கடா அவகிட்ட எந்த பேச்சும் வச்சுக்க வேணாம், நமக்கு படிக்கிற வேலை நிறையா இருக்கு. இதை இப்படியே விட்டுடலாம் என்று கார்த்தி கூறினான்.

நான் எதுவுமே பேசாமல் அதே பயத்தோடு அமைதியாக இருந்தேன்.

சிறிது நேரத்தில் எங்களது வகுப்பிற்குள் ஆசிரியை நுழைந்தார்கள்.

எல்லோரும் எழுந்து நின்று காலை வணக்கம் கூறினோம்.

பின்பு எங்கள் அனைவரையும் அமர சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தார்கள்.

“என்னோட பேரு தமிழ்செல்வி, கணித ஆசிரியைனு உங்க எல்லாருக்கும் முன்னாடியே தெரிஞ்சுருக்கும், அதோட உங்க எல்லாரையும் எனக்கும் தெரியும்.

புதுசா வேற யாராச்சும் சேர்ந்து இருந்தா என்னை பத்தி தெரிஞ்சுகனுமேன்னு தான் சொன்னேன். அப்படி யாரும் இருக்காங்களா ?

“நான் தான் புதுசு மேடம் என்று பெஞ்சில் இருந்து எழுந்து நின்றேன்.

“ஓ… சரிப்பா உன்ன பத்தி சொல்லு.

“என்னோட பேரு விக்ரம், என்று ஆரம்பித்து என்னை பற்றி அனைத்தையும் கூறி முடித்தேன்.

“நீ தான் அந்த விக்ரமா, பத்தாம் வகுப்பு தேர்வுல இந்த ஸ்கூல்ல வாங்குன மார்க் விட அதிகமா வாங்கிருந்தேன்னு கேள்வி பட்டேன்.

ரொம்ப சந்தோசம் உட்காருப்பா என்று அன்பாக கூறினார்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

ஹே… மதுமிதா உனக்கு போட்டியா மார்க் எடுக்க ஒருத்தன் வந்துட்டான், இன்னும் நீ நல்லா படிக்கணும் என்று யாரையோ பார்த்து அந்த ஆசிரியை சொல்லிவிட்டு போர்டில் எழுத தொடங்கினார்கள்.

மதுமிதா… பேரு ரொம்ப நல்லா இருக்கே என்று மெதுவாக திரும்பி பார்த்தேன்.

அங்கே வெங்கியின் தங்கை கோபத்துடன் என்னை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த பார்வையே என்னை எரித்து சாம்பல் ஆக்குவது போல் இருந்தது.

எனது கை கால்கள் அனைத்தும் நடுக்கத்துடன் உதறியது அதை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டேன்.

அப்போது என்னுடைய மனதிற்குள் ஒரு குரல் கேட்டது.

மவனே இனிமே உன்னைய யாராலையும் காப்பாத்த முடியாது…!!!