திமிருக்கு மறுபெயர் நீதானே 2

Tamil Sex Stories சிறு வயதில் இருந்து பள்ளி முடிந்ததும் நேராக வீட்டுக்கு வந்து மீண்டும் படிக்க தொடங்கி விடுவேன். மற்ற நண்பர்கள் வந்து என்னை வெளியில் சென்று விளையாட அழைத்தாலும் என்னுடைய அம்மா செல்வதற்கு அனுமதி தரமாட்டார்கள்.

இதனாலேயே எனக்கு பள்ளியில் எந்த நண்பர்களும் அமையவில்லை.

அதேபோல் பெண்களிடம் பழகுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

இப்படி செய்வதால் எனக்கு அம்மா மீது முதலில் கோபம் வந்தது. ஆனால் ஒரே பிள்ளை என்ற காரணத்தினால் நல்ல படியாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் செய்கிறார்கள் என புரிந்துக்கொண்டேன்.

அதோடு வீட்டில் எனது பெற்றோர் நண்பர்கள் போல் பழகுவதால் எனக்கு இது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை.

அதனால் தான் என்னவோ இன்று பெண்கள் இருக்கும் பள்ளியில் படிக்க வேண்டும் என்று கூறியதும் அதிர்ச்சியாக இருந்தது.

இவ்வாறு சிந்தித்துக்கொண்டு அங்கேயே சிறிது நேரம் நின்றேன். அப்போது யாரோ வீட்டிற்குள் வருவது போல் இருந்தது.

அப்பா உடனே யாரென்று பார்த்து பேசிகொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து என்னையும் அழைத்தார்.

எதற்காக என்னை அழைக்கிறார் என்று புரியாமல் கொஞ்சம் தயக்கத்தோடு சென்றேன்.

அங்கே அவருடைய நண்பர் வந்திருந்தார் கூடவே அவரின் மகனும் வந்திருந்தார். இருவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இவர்களும் இந்த தெருவில் தான் இருக்கிறார்கள். அந்த நண்பரின் மகனும் நான் படிக்கவிருக்கும் பள்ளியில் தான் படிக்கிறான் இருவரும் ஒரே வகுப்பு என்றும் சொன்னார்கள்.

இருவரும் சென்று பேசிக்கொள்ளுங்கள் என்று என்னுடைய தந்தை கூறினார்.

நான் அவனை என்னுடைய அறைக்கு அழைத்து சென்று பேசினேன்.

ஹேய் ஐ ஆம் விக்ரம்.

ஹ்ம்ம் என்னோட பேரு தினேஷ். பெரிய வெள்ளைகாரதுரை இங்கிலீஷ்ல தான் பேசுவீங்களோ… ஒழுங்கா தமிழ்ல பேசுடா என்று கிண்டலடித்தான்.

இதுவரை யாரும் என்னிடம் இப்படி உரிமையாக பேசியதில்லை. இவன் இப்படி பேசியதும் முதல் முறையாக எனக்கொரு நண்பன் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்ப்பட்டது.

சரி தினேஷ் இனிமே தமிழ்லயே பேசுறேன் என்று சிரித்தேன்.

இப்படியே சிறிது நேரம் பேசியதில் அவனை பற்றி நானும் என்னை பற்றி அவனும் நன்றாக புரிந்துகொண்டோம்.

ஆனால் பெண்களிடம் பேசினால் எனக்கு கூச்சம் ஏற்படும் என்பதை மட்டும் தவிர்த்து என்னை பற்றிய அனைத்து விசயங்களும் தெரிந்துகொண்டான்.

அதன் பிறகு அவனுடைய தந்தை அழைத்ததும் வீட்டிற்கு கிளம்பி சென்றான்.

அன்று மாலை தினேஷ் எங்கள் வீட்டிற்கு வந்து விளையாடுவதற்கு அருகில் இருக்கும் மைதானத்திற்கு செல்லலாம் என்று என்னை அழைத்தான்.

எனக்கு செல்வதற்கு ஆசையாக இருந்தது, ஆனால் வீட்டில் என்ன சொல்வார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன்.

ஹ்ம்ம் பாத்து பத்திரமா போயிட்டு வா என்று அம்மா சிரித்த முகத்துடன் கூறினார்கள்.

கூடவே அப்பாவும் நான் தினேஷுடன் செல்வதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார்.

எப்படி இவர்கள் என்னை விளையாட அனுமதி அளித்தார்கள் என்று மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.

பையன் வளந்துவிட்டான் இதற்கு மேல் இவனுக்கு எந்த விஷயத்திலும் தடை போடக்கூடாது. படிப்பு விஷயத்தில் அவன் தெளிவாக இருக்கிறான் என்று நான் எடுத்த மதிப்பெண்ணை வைத்து எனது பெற்றோர் எனக்கு சுதந்திரம் அளித்துள்ளனர்.

மேலும் இருபாலர் பள்ளியில் சேர்த்துவிட்டது கூட என்னுடைய கூச்ச சுபாவத்தை மாற்றுவதற்கான அவர்களின் முயற்சி என்பதை அவர்கள் சொல்லாமலேயே நான் நன்றாக புரிந்துக்கொண்டேன்.

அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எந்த விதத்திலும் கெடுத்துவிடக்கூடாது என்று படிப்பில் மட்டும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து மகிழ்ச்சியுடன் என்னுடைய மிதிவண்டியை எடுத்துக்கொண்டு தினேஷுடன் கிளம்பினேன்.

தினேஷ் அவனுடைய மிதிவண்டியை இயக்கினான் நானும் அவனுக்கு அருகிலேயே வண்டியை இயக்கிக்கொண்டு இருவரும் சாலையில் பயணம் செய்தோம்.

அப்போது நான் பேச ஆரம்பித்தேன்.

“தினேஷ் அந்த கிரவுண்ட் எங்க இருக்கு..?

“இங்க தான் பக்கத்துல இருக்கு பத்து நிமிஷத்துல போயிடலாம்.

“ஹ்ம்ம் அங்கே என்னலாம் விளையாடுவீங்க ?

“கிரிக்கெட் தான் விளையாடுவோம்.

“எனக்கு தான் ஒன்னும் விளையாட தெரியாதே நான் என்ன பண்றது.

“டேய் விக்ரம் அதுக்குதான் உன்ன முதல்ல கூட்டிட்டு போறேன். ஒன்னும் கவலைப்படாதே எங்க கூட நீயும் விளையாடு கொஞ்ச நாள்ல எல்லாத்தையும் சீக்கிரம் கத்துக்குவே என்று தைரியம் சொன்னான்.

எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. சிறிது நேரத்தில் அந்த மைதானத்தை அடைந்தோம்.

அங்கே எங்களை போன்று நிறைய பேர் வந்திருந்தனர். அனைவரும் எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்று தினேஷ் அறிமுக செய்தான்.நானும் என்னை பற்றி அறிமுகம் செய்துகொண்டேன்.

பின்பு இரண்டு அணிகளாக பிரிந்து விளையாட தொடங்கினர். நானும் அவர்களுடன் ஈடுபாடுடன் விளையாடினேன்.

பேட்டிங் செய்வதற்கு எனக்கும் ஒரு வாய்ப்பு தந்தார்கள். என்னால் ஒரு பந்தும் அடிக்க முடியவில்லை.

தினேஷ் என்னை பற்றி அவர்களிடம் சொன்ன காரணத்தினால் என்னை யாரும் கிண்டல் செய்யவில்லை. பந்தை சரியாக அடிப்பதற்கு கைதட்டி என்னை ஊக்குவித்தனர்.

உடனே கடைசி பந்தை வேகமாக அடித்தேன். அது பௌண்டரிக்கு சென்றது.

எல்லோரும் என்னை கூச்சலிட்டு பாராட்டினர்.

இதுவரை சாதிக்க முடியாத ஒன்றை முதன் முதலாக சாதித்துவிட்டேன் என்று மனதில் மகிழ்ச்சி பொங்கியது.

அதன் பின் தினேஷுடன் வீட்டிற்கு கிளம்பினேன்.

“நான் கூட என்னமோ நினைச்சேன். ஆனா மச்சி சூப்பரா விளையாடுன என்று தினேஷ் உரிமையாக பாராட்டினான்.

“நானும் தேங்க்ஸ் மச்சி என்று சிரித்த முகத்துடன் கூறினேன்.

பின்பு இதேபோல் தினமும் மைதானத்திற்கு சென்று விளையாடினோம்.

இதனால் எங்களுக்குள் இருந்த நட்பு மேலும் பலமானது.

இவன் தான் என்னுடைய உயிர் நண்பன் என்று மனதிற்குள் தோன்றி மகிழ்ச்சி பொங்க செய்தது.

இப்படியே நாங்கள் முதல் நாள் பள்ளி செல்ல வேண்டிய நாளும் வந்தது.

தினேஷும் நானும் எங்களது மிதிவண்டியிலேயே பள்ளிக்கு கிளம்பி பேசிக்கொண்டே சென்றோம்.

“மச்சி நாம கிரிக்கெட் விளையாடும்போது உன்னோட பிரண்ட்ஸ் நிறைய பேரு இருந்தாங்களே. அவங்க எல்லோரும் நம்ம கிளாஸ்லதான் இருப்பாங்களா?

“விக்ரம் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்டா.

“என்ன விஷயம்டா ஒழுங்கா சொல்லு.

“மொத்தம் அஞ்சு செக்சன் இருக்கு. யார எந்த கிளாஸ்ல போடுவாங்கான்னு தெரியாதுடா இவ்வளவு ஏன் நானே எந்த கிளாஸ்னு போயி பாத்தா தான் தெரியும்.

“என்னடா தினேஷ் நாம ஒன்னா படிக்க முடியாதாடா ?

“தெரியலை மச்சி முதல்ல ஸ்கூலுக்கு போயி பாக்கலாம் என்று கூறினான்.

நானும் சரி என்று கூறிவிட்டு சோகத்துடன் மிதிவண்டியை செலுத்தினேன்.

சிறிது நேரத்தில் இருவரும் பள்ளிக்கு வந்து சேர்ந்தோம்.

வண்டியை நிறுத்திவிட்டு எங்களுடைய வகுப்பு எங்கு உள்ளது என்று தேடினோம்.

அங்கு ஒரு இடத்தில் செக்சன் வாரியாக மாணவர்களின் பெயர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

அதில் இருந்த முதல் செக்சனில் தினேஷின் பெயரும் என்னுடைய பெயரும் இருந்தது. அப்போது நான் அடைந்த சந்தோசத்திற்கு எல்லையே இல்லை.

தினேஷும் அதே சந்தோசத்துடன் இருந்தான். நாங்கள் இருவரும் வேகமாக எங்களுடைய வகுப்பறைக்குள் நுழைந்தோம்.

அங்கே ஆண்கள் பெண்கள் என்று தனித்தனி வரிசையில் அமர்ந்திருந்தனர்.

மாணவர்கள் அனைவரும் புதிதாக வந்த என்னையே விசித்திரமாக பார்த்துகொண்டிருந்தனர்.

அதிலும் பெண்கள் எல்லோரும் யார் இவன் என்று என்னை சந்தேகத்தோடு பார்த்துகொண்டு இருந்தது எனக்கு கூச்சத்தை ஏற்படுத்தியது.

அப்போது அவர்களை பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்து எங்கு அமரலாம் என்று தினேஷிடம் கேட்டேன்.

அதோ கடைசி பெஞ்ச் இருக்கு பாரு அங்க உட்காரலாம் என்று கூறினான்.

எனக்கு அது பிடிக்கவில்லை வேறு எங்கு அமரலாம் என்று பார்க்கும்போது அனைத்து பெஞ்சிலும் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். ஆனால் முதல் வரிசையில் மட்டும் இடம் காலியாக இருந்தது.

இங்கயே அமரலாம் என்று முடிவு செய்து தினேஷிடம் கேட்டேன்.

“டேய் அதெல்லாம் முடியாது லாஸ்ட் பெஞ்லதான் உட்காரணும். முதல் பெஞ்ச் எனக்கு பிடிக்காது என்று கூறினான்.

இவனை எப்படியாவது சமாதானம் செய்து இங்கே உட்காரவைக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தேன்.

நான் எது சொன்னாலும் முடியவே முடியாது என்று தீர்மானமாக இருந்தான்.

ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

நாங்கள் இப்படி வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில் வேறு சில மாணவர்கள் வந்து கடைசி பெஞ்சில் அமர்ந்து இடத்தை நிரப்பினார்கள்.

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது, அப்படியே தினேஷின் முகத்தை பார்த்தேன் என்னை முறைத்துகொண்டு இருந்தான். அது எனக்கு மேலும் சிரிப்பு வரவைத்தது அதனை அடக்கிக்கொண்டு பேசினேன்.

“விடு மச்சி நாம இங்க தான் உட்காரணும்னு கடவுள் ஏற்கனவே முடிவு பண்ணிட்டாரு. டேக் இட் ஈசி.

“போடா வெண்ணை என்று சொல்லிவிட்டு கோபமாக முதல் பெஞ்சில் அமர்ந்தான். நானும் அவன் அருகில் சென்று அமர்ந்துக்கொண்டேன்.

நீண்ட நேரம் அவன் என்னிடம் பேசாமல் அமைதியாக இருந்தான். அவன் அருகில் இருந்த இரண்டு மாணவர்களும் என்னை யாரென்று விசாரித்தனர்.

அவர்களில் ஒருவன் பெயர் வெங்கட் இன்னொருவன் பெயர் கார்த்தி இருவரும் என்னிடம் நன்றாக பேசினார்கள்.

அதன் பின் தினேஷும் கோபத்தை மறந்து என்னை மாணவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தான். ஆனால் பெண்களிடம் அறிமுகம் செய்து வைக்கவில்லை அது சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது.

இப்படியே நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது திடிரென்று வகுப்பிற்குள் மின்னல் வேகத்தில் ஒருத்தி தேவதை போல் நுழைந்தாள்.

அவளது வெண்ணிற மேனியில் லேசான சதை பிடிப்புடன் மெருன் கலரில் சீருடை அணிந்திருந்தாள். அது அவளுக்கு மிகவும் அழகாக இருந்தது.

நிலவை போன்ற அவளது வட்ட முகத்தில் இருக்கும் இரண்டு கண்களும் என்னை அப்படியே கவர்ந்து இழுத்தது.

அவள் வேகமாக யாரையும் கண்டுகொள்ளாமல் என்னை கடந்து சென்று பெண்கள் வரிசையில் இருக்கும் முதல் பெஞ்சில் அமர்ந்துக்கொண்டாள்.

என்னுடைய கண்கள் விலகாமல் அவளையே ஒரு வித குதூகலத்துடன் பார்த்துகொண்டிருந்தது.

அதை கெடுக்கும் விதமாக என் பக்கத்தில் இருந்து ஒரு குரல் என் காதில் மட்டும் விழுவது போல் கேட்டது.

“வந்துட்டாய வந்துட்டா கழுகுக்கு மூக்கு வேர்த்த மாதிரி கரெக்டா வந்துட்டா” கொஞ்சம் பயத்துடன் தினேஷ் கத்தினான்.

“ஏன்டா இப்படி கத்துற என்று எரிச்சலுடன் கேட்டேன்.

“வந்த முதல் நாளே அவள சைட் அடிக்கிறியா என்று கலாய்த்தான்.

“ஹ்ம்ம் சைட் அடிச்சா என்ன தப்பு என்று கொஞ்சம் தைரியமாக அவனிடம் சொன்னேன்.

“நீ சைட் அடிச்சா தப்பில்லை. ஆனா அவ அடிச்சா நீ தாங்க மாட்ட என்று மேலும் என்னை எரிச்சலாக்கினான்.

“என்னடா சொல்லுற அடிப்பாளா ? எதுக்குடா?

“ஹ்ம்ம் உனக்கு சும்மா சொன்னா புரியாது கொஞ்சம் விவரமா சொல்லுறேன் கேட்டுக்கோ. இவகிட்ட பசங்க யாராச்சும் பேச போனா திரும்ப வரும்போது கன்னத்துல கையை வச்சுகிட்டு தான் வருவாங்க.

“ஏன்டா அவங்களுக்கு எல்லாம் பல்லு வலி வந்துடுமா?

“நீ சரியான தத்திடா, அவளுக்கு பசங்கள பாத்தாளே பிடிக்காது. எதாச்சும் போயி பேசுனா முதல்ல அறைதான் அப்புறமாதான் என்னன்னு கேப்பா.

“டேய் நீ சொல்றதுல்லாம் நம்புற மாதிரி இல்லடா, எவளோ அழகா இருக்கா இவள போயி இப்படி சொல்லுறியே.

“ஹ்ம்ம் அழகு இருக்குற இடத்துலதான் ஆபத்தும் இருக்கும், இன்னொரு விஷயத்தை சொன்னா தான் நீ கொஞ்சம் நம்புவே.