திமிருக்கு மறுபெயர் நீதானே 1

Tamil Sex Stories ஓர் சிறிய நகரத்தில் இருக்கும் பிரபலமான பள்ளி ஒன்றில் இறுதித்தேர்வு முடிந்து மாணவர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக தேர்வு அறையைவிட்டு மகிழ்ச்சியுடன் வெளியில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் மிகவும் பதட்டத்துடன் அனைவரையும் இடித்துக்கொண்டு வேகமாக ஓடினான்.

கூட்டத்தில் இருப்பவர்கள் ஏன் இவன் இப்படி ஓடுகிறான் என்று கோபத்துடன் திட்டினர்.

ஆனால் அதையெல்லாம் அவன் காதில் வாங்கிக்கொள்ளாமல் கூட்டத்தையும் தாண்டி வேர்க்க விருவிருக்க பள்ளி மைதானம் இருக்கும் இடத்திற்கு ஓடி வந்தான்.

இப்போது அவனுடைய வேகம் சற்று குறைந்து மெதுவாக நடந்து மைதானத்திற்கு அருகில் இருக்கும் வண்டிகள் நிறுத்தும் இடத்திற்கு சென்றான்.

அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் அவனுடைய மிதிவண்டிக்கு அருகில் சென்று அதை பிடித்துக்கொண்டு பயங்கரமாக மூச்சு வாங்கினான்.

சிறிது நேரத்தில் அவனுடைய மூச்சு சீரானவுடன், முகத்தில் வழிந்த வேர்வை துளிகளை தன்னுடைய கைக்குட்டையால் துடைத்துகொண்டு சற்று தெளிவடைந்தான்.

ஏன் இப்படி மூச்சிரைக்க ஓடிவந்தேன் என்று நீங்கள் அனைவரும் யோசித்துக்கொண்டு இருப்பீர்கள்.

அதை சொல்வதற்கு முன் என்னை பற்றியும் கடந்த இரண்டு வருடங்களாக என்னுடைய வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றியும் கூறுகிறேன்.

என் பெயர் விக்ரம். எனது வீட்டில் நான் அம்மா அப்பா என மூவர் மட்டுமே இருக்கும் சிறிய குடும்பம்.

அப்பா எங்கள் ஊரில் இருந்த ஒரு அரசாங்க அலுவலகத்தில் வேலை பார்த்தார். அம்மா வீட்டையும் என்னையும் கவனித்துக்கொள்வார்கள்.

வீட்டிற்கு ஒரே பிள்ளை என்ற காரணத்தால் என்னை மிகவும் செல்லமாக வளர்த்தனர். அதனால் நான் கேட்பது அனைத்தும் எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல் உடனுக்குடன் கிடைத்தது.

மேலும் எந்த மனச்சிதறலும் இல்லாமல் படிப்பில் மட்டுமே முழு கவனமும் செலுத்தினேன். இப்படியே என்னுடைய வாழ்கை நல்ல படியாக சென்று கொண்டிருந்தது.

சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சிப்பெற்றேன்.

வீட்டில் அம்மா அப்பா இருவருக்கும் மிகுந்த சந்தோசம்… ஆனாலும் மாவட்ட அளவில் முதல் மாணவனாக வந்திருக்கலாம் என்று கொஞ்சம் கவலை அடைந்தனர்.

மேல்நிலை இரண்டாம் ஆண்டில் நடக்கும் இறுதி தேர்வில் இதை விட நல்ல மதிப்பெண் எடுக்கிறேன் என்று கூறினேன். அதனால் அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இப்படியே ஒரு வாரம் என்னை கடந்து சென்றது.

அப்போது அலுவலகத்தில் இருந்து என்னுடைய அப்பா வீட்டிற்கு கொஞ்சம் பரப்பரப்புடன் வந்தார்.

என்னவென்று அம்மாவும் நானும் விசாரித்தோம். அவருக்கு பணி இடமாறுதலுக்கான ஆணை வந்துள்ளது… எங்கள் ஊரில் இருந்து தொலைவில் இருக்கும் ஒரு சிறிய நகரத்திற்கு இன்னும் இரண்டு நாட்களுக்குள் செல்ல வேண்டும் என்று கூறினார்.

சிறு வயதில் இருந்து இங்கே இருந்துவிட்டு… இப்போது தெரியாத ஊருக்கு செல்ல வேண்டுமே என்று நினைக்கும்போது கவலையாக இருந்தது.

உடனே அப்பாவிடம் இதைப்பற்றி சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அப்பா திடீர்னு எப்படி இந்த ஊரைவிட்டு போறது, அதோட ஸ்கூலும் மாறனுமே… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே.

விக்ரம் இதை பத்தில்லாம் நீ ஒன்னும் கவலைப்படாத.. எல்லாம் விசாரிச்சுட்டேன்.
நாம புதுசா போகபோற ஊர்ல நல்ல ஸ்கூல் இருக்குது, அங்க தான் இனிமே நீ படிக்கணும் என்று உறுதியாக கூறினார்.

பின்பு நானும் வேறு வழியில்லாமல் அந்த புதிய பள்ளியில் சேர்வதற்கு சம்மதம் தெரிவித்தேன்.

அடுத்த நாள் காலை நாங்கள் அனைவரும் எங்களுடைய வீட்டை காலி செய்துகொண்டு அந்த புதிய ஊருக்கு பயணம் செய்தோம்.

மாலையில் தான் அந்த ஊருக்கு போய் சேர்ந்தோம். ஏற்கனவே அப்பாவின் நண்பர் மூலம் ஒரு நல்ல வீட்டை வாடகைக்கு பிடித்திருந்தனர்.

அங்கு சென்று எங்களுடைய பொருட்கள் அனைத்தையும் சரி செய்து எனக்கென்று ஒரு அறையை தேர்வு செய்துகொண்டேன்.

ஒரு வழியாக வீட்டை ஒழுங்குப்படுத்தி தூங்குவதற்கு இரவு ஆனது. சாப்பிட்டுவிட்டு என்னுடைய அறைக்கு சென்று தூங்கினேன்.

அடுத்தநாள் காலை அம்மா என்னை சீக்கிரமாக எழுப்பி விட்டார்கள். நேற்று நீண்ட தூரம் பயணம் செய்து வந்த காரணத்தினால் மிகவும் சோர்வாக இருந்தது.

அம்மா உடம்பு ரொம்ப வலிக்குது இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கிட்டு எழுந்திருக்கிறேன் என்று கூறினேன்

டேய் விக்ரம் உன்னைய புது ஸ்கூல்ல சேர்த்து விடனும்… உங்க அப்பாவுக்கு இன்னைக்கு மட்டும் தான் லீவ் அதனால ஒழுங்கா எந்திரிச்சு குளிடா என்று திட்டினார்கள்.

எனக்கு தூங்குவதற்கு வழியில்லை என்று புரிந்தது உடனே சரி என்று கூறிவிட்டு எழுந்து குளிப்பதற்கு சென்றேன்.

அதன் பின் என்னுடைய பெற்றோருடன் அந்த புதிய பள்ளிக்கு சென்றேன்.

நான் ஏற்கனவே படித்த பள்ளியைவிட இது மிகவும் பெரிதாக இருந்தது, அதனால் எனக்கு பார்த்தவுடன் பிடித்து போனது.

உள்ளே சென்று பார்த்தோம் பள்ளி விடுமுறை என்பதால் கூட்டம் எதுவும் இல்லை. மேலும் நாங்கள் தான் அட்மிசன் போடுவதற்கு முதல் ஆளாக வந்திருக்கிறோம் என்று புரிந்துகொண்டேன்.

என்னுடைய மதிப்பெண்ணை பார்த்து அங்கு இருந்த ஆசிரியர்கள் எல்லோரும் வெகுவாக பாராட்டினார்கள்.

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது… அதே சந்தோசத்தோடு அட்மிசன் போட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

நாங்கள் பள்ளியின் நுழைவாயிலை விட்டு வெளியே வரும்போது தான் நிறைய பேர் அட்மிசன் போடுவதற்கு உள்ளே சென்றுக்கொண்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் கூட்டமாக வருவதை பார்த்து கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் மனதிற்குள் கேள்வி ஒன்று எழுந்தது அதை அப்பாவிடம் கேட்க வேண்டும் என்று மனது துடித்தது.

ஆனால் அப்போது கேட்பதற்கான சூழ்நிலை எதுவும் சரியாக அமையாத காரணத்தினால் வீட்டிற்கு சென்றதும் கேட்டுக்கொள்ளலாம் என்று மனதை அடக்கிக்கொண்டேன்.

வீட்டிற்கு சென்றதும் அம்மா சமையல் செய்வதற்கான வேலையை தொடங்கினார். அப்பா அவருடைய அறைக்கு சென்றார்.

நான் அவருடைய அறைக்கு சென்று அவரிடம் பேசலாம் என்று முடிவு செய்தேன்.

அப்பா அலுவலக விஷயமாக மேசையில் வைத்து எதையோ எழுதிக்கொண்டிருந்தார். நான் சென்று அவரை அழைத்தேன்.

அப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.

என்ன விக்ரம் பேசணும், ஏதும் முக்கியமான விஷயமா…?

ஆமா ரொம்ப முக்கியமான விஷயம் தான் பேசணும்… இப்ப பேசலாமா..?என்று தயங்கினேன்.

உடனே அப்பா அவர் எழுதிக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு என் அருகில் வந்தார்.

ஹ்ம்ம் எதுவா இருந்தாலும் சொல்லு விக்ரம்… ஏன் இப்படி தயங்குற…?

நான் என்னுடைய மனதில் வைத்து துடித்துக்கொண்டிருந்த விஷயத்தை கேட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன்.

சரி சொல்லுறேன்பா… இன்னிக்கி நாம அட்மிசன் போட்டுட்டு வெளியே வரும்போது நிறைய பொண்ணுங்க அவங்க அப்பா அம்மா கூட ஸ்கூல் உள்ளே போன மாதிரி இருந்துச்சு ஏன்பா…?

என்னடா விக்ரம் இப்படி கேள்வி கேக்குற.. அவங்களும் அட்மிசன் போட தான் வந்துருப்பாங்க.

என்னப்பா சொல்லுறீங்க நான் படிக்க போறது பாய்ஸ் அண்ட் கேள்ஸ் சேர்ந்து படிக்கிற ஸ்கூலா என்று அதிர்ச்சியுடன் கேட்டேன்.

இதுல என்னடா சந்தேகம் ரெண்டு பேரும் சேந்து படிக்கிற ஸ்கூல் தான் என்று நிதானமாக சொன்னார்.

அப்போது அப்பாவை அம்மா ஏதோ கேட்பதற்காக அழைத்தார்கள்.

வேறு எதுவும் கேக்கணுமா விக்ரம் என்று என்னை வினாவினார்.

நான் வேறேதும் இல்லை என்று தலை ஆட்டினேன்… அவரும் அதற்கு சரி என்று கூறிவிட்டு அம்மாவிடம் பேச சமையலறைக்கு சென்றார்

இதுவரை நான் ஆண்கள் மட்டுமே இருக்கும் பள்ளியில் படித்த காரணத்தினால் பெண்கள் இருக்கும் பள்ளியில் எப்படி படிக்க போகிறோம் என்ற பயம் இப்போதே எனது மனதில் தொற்றிக்கொண்டது.

அதனால் அந்த அதிர்ச்சி விலகாமல் அங்கேயே சிலை போல் நின்றேன்…!!!